01.02.2025 (சனிக்கிழமை) அன்று, நம் பள்ளியின் 38ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. காலை, பள்ளி மாணவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, தலைவர் K.P.A. ஜாஃபர் அலி அவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து, செயலாளர் K.R. பாட்ஷா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.
விழாவின் ஒரு பகுதியாக, சிலம்பம், கராத்தே, யோகா, பிரமிடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு விழாவிற்கான பாராட்டு சான்றிதழ்கள், வருகைக்கான சான்றிதழ்கள், மற்றும் பிற சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.மாலை, பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. முதல்வர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிர்வாக அலுவலர் ஆண்டறிக்கை வாசித்தார். அதன் பின்னர், தலைவர் K.P.A. ஜாஃபர் அலி மற்றும் சிறப்பு விருந்தினர் ஜக மகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதனைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நன்றி உரையுடன், ஆண்டு விழா இனிதே நிறைவு பெற்றது.
