- எமது கிரசெண்ட் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். 1947 ஆகஸ்ட் 15 ல் அஹிம்சை வழியில் பெறப்பட்ட சுதந்திரம் 79 வது சுதந்திர தினமான 2025 ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று அமைதியாகவும், அழகாகவும் எமது பள்ளியில் மகிழ்ச்சியான விழாவாகக் கொண்டாடப்பட்டது.
- தலைவர் ஹாஜி K.P.A. ஜாஃபர் அலி B.E.,M.Sc., அவர்கள் தலைமையேற்க தாளாளர், செயலாளர், இணை செயலாளர் முன்னிலை வகிக்க இறை வணக்கத்துடனும் தமிழ்த்தாய் வாழ்த்துடனும் விழா தொடங்கப்பட்டது.
- எமது பள்ளியின் முதல்வர் திருமதி B. கோமதி M.sc.,M.Ed., அவர்கள் வரவேற்புரை வழங்க, எமது பள்ளியின் நிர்வாக உறுப்பினர். ஜனாப். M.முஹம்மது ஜபருல்லா B.com அவர்கள் தேசிய கொடியேற்றி மாணவ மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். ஹாஜி P.H. அப்துல் முஹம்மது M.A., அவர்கள் சிறப்புரையாற்ற நிர்வாக அலுவலர் திருமதி K. பத்மாவதி சிங்காரவேலன் B.lit.,MA.,M.phil அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
- சுதந்திரம் தினம் பற்றி திருமதி A. சுபஸ்ரீ M.com.,B.Ed., அவர்களும், மாணவிகள் M. இனாஸ் (12 ம் வகுப்பு),S. லியானா ( 12 ம் வகுப்பு) ஆகியோரும் உரையாற்றினர். ஆங்கில ஆசிரியர் திரு A. அருள் கென்னடி M.A.,B.Ed., அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதம் பாடப்பட்டு விழா இனிது நடந்தேறியது.
