- நமது சுதந்திர இந்தியாவின் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் 26.1.2026 திங்கட்கிழமை அன்று எமது கிரஸெண்ட் பள்ளியில் மகிழ்ச்சியான விழாவாக கொண்டாடப்பட்டது.
- தலைவர் ஹாஜி K.P.A. ஜாஃபர் அலி B.E.,M.SC., அவர்கள் தலைமை ஏற்க தாளாளர் ஹாஜி P.H.அப்துல் முஹம்மது M.A., செயலாளர் ஜனாப் A.R. முஹம்மது பாட்ஷா, நிர்வாக உறுப்பினர் ஜனாப் M.முஹம்மது ஜபருல்லா B.Com., முன்னிலை வகிக்க இறைவணக்கத்துடனும், தமிழ்த்தாய் வாழ்த்துடனும் விழா தொடங்கப்பட்டது.
- எமது பள்ளியின் முதல்வர் திருமதி B.கோமதி அறிவழகன் M.Sc.,M.Ed., அவர்கள் வரவேற்புரை வழங்க எமது பள்ளியின் இணைச்செயலாளர் ஜனாப் K.P.முஹம்மது பாரூக் அவர்கள் தேசிய கொடியேற்றி மாணவ மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். நிர்வாக அலுவலர் K.பத்மாவதி சிங்காரவேலன் B.Lit.,M.A.,M.phil அவர்கள் சிறப்புரையாற்றினார்.
- குடியரசு தினம் பற்றி இளங்கலை ஆசிரியர் V.பிரதீபா M.SC.,B.Ed., அவர்களும், மாணவிகள் M.முப்லிஹா அப்னூன் (11ஆம் வகுப்பு), S.சமீஹா அப்ரா (10 ம் வகுப்பு), M.அஸ்மிதா (11ஆம் வகுப்பு), ஆகியோரும் உரையாற்றினர். முதுகலை ஆங்கில ஆசிரியர் திரு A.அருள் கென்னடி M.A.,B.Ed., அவர்கள் நன்றியுரை கூற தேசிய கீதம் பாடப்பட்டு விழா இனிதே நடந்தேறியது.
