- 01.08.2025 வெள்ளிக்கிழமை அன்று நம் பள்ளியில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டியானது நடைப்பெற்றது.
- பள்ளியின் தலைவர் ஹாஜி ஜாஃபர் அலி B.E., M.Sc., (Eng) AIMADM.,தாளாளர் ஹாஜி P. H அப்துல் முஹம்மது M.A., செயலாளர் ஜனாப் A.R முஹம்மது பாட்சா, இணைச் செயலாளர் ஜனாப் K.P. முஹம்மது ஃபாரூக் மற்றும் நிர்வாக உறுப்பினர் ஜனாப் M. முஹம்மது ஜபருல்லா B.Com., ஆகியோர் முன்னிலையில் குறுவட்ட அளவிலான கேரம் போட்டியானது தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர்,ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- அன்று. UNDER-14 பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர், UNDER-17 பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர், UNDER-19 பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என மூன்று பிரிவிலும் ஏறக்குறைய 40 பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.நடைபெற்ற போட்டிகளில் நம் பள்ளியின் UNDER-19 பிரிவில் இரட்டையர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெறும் தகுதியினைப் பெற்றனர் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
